Tuesday, July 27, 2010

கேள்வியும் நானே.. பதிலும் நானே...

1. கே:அறிவுக்கும்,கூர்மையான அறிவுக்கும் என்ன வித்யாசம்?

ப:அறிவு வாழ்க்கைக்கு பயன்படும்,கூர்மையான அறிவு வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்ள பயன்படும்.
காகம் பிற காகங்களை கரைந்து உண்ணுவதை 'பகிர்தல்' என உணர்தல் அறிவு,
அதனையே அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அந்த காகம் பிற காகங்களை ' கிட்டே வராதீர' என விரட்டுவதாக 'கண்டுபிடிப்பது "
கூர்மையான அறிவு.

2.கே:சுய நலத்துக்கும் பொது நலத்துக்கும் என்ன வேறுபாடு?
ப:நம் தட்டில் உள்ள இட்லியை நாம் எடுத்து சாப்பிடுவது சுயநலம்,
பக்கத்துக்கு தட்டில் உள்ள இட்லியை எடுக்காமல் இருப்பது பொது நலம்!

3.கே:தமிழில் படிப்பதால் தமிழகத்தில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை உண்டா?
ப: தமிழில் படிப்பதால் என்னவிதமான முன்னுரிமை வருமோ தெரியாது, ஆனால் பீகாரி படித்தால் சட்டசபை கட்டிடத்தை கட்டும் பணி கிடைப்பதென்னவோ நிச்சயம்...!

நேயர்களுக்கான இந்தவார கேள்வி:
(யாரும் பதிலளிக்காவிட்டால் நானே பதிலளிக்கும் அபாயம் உண்டு)

கே:சாதா அறிவுக்கும், பகுத்தறிவுக்கும் என்ன வேறுபாடு?

warm up பதிவு!

உண்மையை எழுதுவோம் ..
நன்மையை எழுதுவோம்..
உண்மையாயினும் தீமையை எழுதோம்..
நனமையாயினும் உண்மை அல்லாதன எழுதோம்..

இப்போதுதான் மாறி மலை முழைஞ்சில் மன்னிக்கிடந்த
சிங்கம் சோம்பல் முறித்து புறப்பட்டது.
இனி மெல்ல என் பகிர்தல் தொடரும்.